Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neengal Enna Ok va?
Neengal Enna Ok va?
Neengal Enna Ok va?
Ebook126 pages48 minutes

Neengal Enna Ok va?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1967ல் தான் நான் எழுதிய கதை, கட்டுரைகள் பிரசுரமாக ஆரம்பித்தன. நான் அதிகம் எழுதாததால் பிரபலமடையவில்லை. தொடர்ந்து நிறைய எழுதாததும் ஒரு காரணம். பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் மீண்டும் எழுத ஆரம்பித்தேன். முகநூல் வந்த பின்னால் மீண்டும் நான் எழுத ஆரம்பித்தேன். முகநூலிலும், வந்த கட்டுரைகளை இங்கு தொகுத்திருக்கிறேன்.

Languageதமிழ்
Release dateOct 9, 2021
ISBN6580115207504
Neengal Enna Ok va?

Read more from Ananthasairam Rangarajan

Related to Neengal Enna Ok va?

Related ebooks

Reviews for Neengal Enna Ok va?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neengal Enna Ok va? - Ananthasairam Rangarajan

    https://www.pustaka.co.in

    நீங்கள் என்ன ஓகேவா?

    (கல்கி, தீபம், முகநூல் கட்டுரைகள்)

    Neengal Enna Ok va?

    (kalki deepam muganool katturaigal)

    Author:

    அனந்தசாய்ராம் ரங்கராஜன்

    Ananthasairam Rangarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ananthasairam-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. ஆங்கிலம் மிகவும் அவசியம்

    2. நீங்கள் என்ன ஓகேவா……

    3. சபரிமலை சாஸ்தா தரிசனம்

    4. அலை ஓசை ஓர் அகராதி

    5. பறவை பார்த்தல் ஒரு தியானம்

    6. சமுதாய வீதி—ஓர் திறனாய்வு

    7. மண்ணில் விழாது வானம்

    8. கோயில்-கடவுள்-நான்

    9. பருப்பு புராணம்

    10. நான் கண்ட பொங்கல்

    11. நான் எப்படி ஆங்கிலம் கற்றேன்?

    12. மரபுசார் மடங்களும் கார்பொரேட் மடங்களும்.

    13. மொழிப்பள்ளம்

    14. காணாமற் போகும் மொழிகள்

    15. அச்சில் எழுத்தைப் பார்க்கும் சந்தோஷம்

    16. ஒரு பாணத்தின் கதை

    17. இது திருமலைதானா…

    18. மழித்தல் வரலாறு

    19. தீபாவளி நினைவுகள்

    20. நான் எழுத்தாளனானேன்

    21. சிங்கை உலா

    முன்னுரை

    1967ல் தான் நான் எழுதிய கதை, கட்டுரைகள் பிரசுரமாக ஆரம்பித்தன. காலஞ்சென்ற பத்திரிகை ஆசிரியர் சாவி அவர்கள்தான் என் கதையை முதலில் வெளியிட்டார். நான் அதிகம் எழுதாததால் பிரபலமடையவில்லை. தொடர்ந்து நிறைய எழுதாததும் ஒரு காரணம். பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.

    முகநூல் வந்த பின்னால் மீண்டும் நான் எழுத ஆரம்பித்தேன். அங்கே உள்ள சுதந்திரம் போன்று பத்திரிகைகள் கொடுப்பதில்லை. குறுக்கீடுகள் அதிகம். முகநூலிலும், என்னுடைய blog –லும் வந்த கட்டுரைகளை இங்கு தொகுத்திருக்கிறேன். சில கட்டுரைகள் தீபம், கல்கி, மல்லிகை மகள் போன்ற பத்திரிகைகளில் வந்தவையாகும்..

    ஓரு பிரபலமான ஆங்கில இலக்கிய விமர்சகரிடம், What is literature? என்று கேட்டார்கள். அதற்கு அவர் Anything that attracts you even on a match box is literature என்றார்.

    இந்தத் தொகுப்பில் உள்ள ஒரு கட்டுரையே புத்தகத் தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

    1. ஆங்கிலம் மிகவும் அவசியம்

    (இந்தக் கட்டுரை திரு நா. பார்த்தசாரதி அவர்களின் தீபம் பத்திரிகை 1967 ம் ஆண்டு நடத்திய மொழிப்பிரச்னைக் கருத்தரங்குப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றது. காலம்சென்ற எழுத்தாளர் திரு அகிலன் அவர்கள் தலைமையில் நடந்த எளிய விழாவில் எனக்கு பார்க்கர் பேனாவை அவர் கொடுத்தார். என்னுடைய ஆங்கில மேற்கோள் தம்மை மிகவும் கவர்ந்ததால் முதல் பரிசு தரப்பட்டது என தீபம் இணையாசிரியர் அசோகமித்திரன் தெரிவித்தார்.)

    மொழிவாரி மாநிலங்கள்

    இந்தியா விடுதலை அடைந்த பிறகு ஆளும் அரசியலார் செய்தமுதல் பெரிய தவறு, நாட்டை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்ததுதான் என்று அறிஞர் சிலர் கூறுவது உண்மையான கூற்றாகத்தான் இருக்கிறது.

    இந்தியா போன்று ஒரு சர்வதேச நாடாகவும், ஆசியாவின் ஜனநாயகப் பாதுகாப்புச் சின்னமாகவும் திகழ்கிற தேசத்திற்கு இன்றைய மொழிப்பிரச்ச்னையே ஒர் இழுக்கு என்றுதான் கூறிக்கொள்ளவேண்டும். கல்வித் துறையில் அரசியல்வாதிகளின் தலையீட்டினால்தான் இத்தனை தொல்லைகள் விளைந்துள்ளன. நாம் முதலில் தேசபக்தியுடன் நடந்துகொள்ள முயற்சி செய்யாததனால்தான் கல்விமொழிப் பிரச்னையே முளைத்திருக்கிறது.

    ஆங்கிலேயனை விரட்டியது தேசபக்தியாகத் திகழும் செயலுக்கு ஓர் எடுத்துக்காட்டென்றால் சிலர் ஆங்கிலத்தை விரட்டுவது கூட ஒரு தேசபக்திச் செயலே என்று கூக்குரலிடுகின்றனர். முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல அன்று ஆங்கிலத்தை ஆங்கிலத்தால் நமது விடுதலை வீரர்கள் விரட்டினார்கள். அன்று தொட்டு நம் நாட்டுக்கு இயற்கையாகஅமைந்த ஓர் இணைப்பு மொழியாக ஆங்கிலம் உதவி செய்து வந்திருக்கிறது. அதற்கு முன்னால் நாம் என்ன ஒற்றுமையாக ஒரே நாட்டினர் என்றா இருந்தோம்?

    நமக்குள் பிரிவினைகள்—மதத்தின் பெயராலும், மொழியின் பெயராலும், என்ணங்களின் தோன்றவே இடம் கொடுத்தோம்.. அந்தப் பழைய நிலைக்கு இந்தியா மீண்டும் ஆளாகவேண்டும் என்று நினைப்பவர்கள்தாம் ஆங்கிலம் வேண்டாம் என்கிறார்கள்.

    நமக்கு ஆங்கிலத்தை விட்டால் வேறு இணைப்பு மொழி உண்மையாக இன்னும் ஏற்படவில்லை. இந்தி தயாராகிவிட்டது என்பது ஏமாற்று வித்தை.மொழிவாரியாக இந்தியாவைப் பூகோளரீதியில் துண்டாக்கிவிட்ட கேட்டிற்கு, ஆங்கிலத்தை ஒழிப்பது என்பது ‘சிந்தனை ஒன்றுடையாளைச் சிதறிப்போன எண்ணங்களை உடையவளாக மாற்றுவதேயன்றி வேறில்லை.

    நமது மொழிகள்

    இந்திய தேசிய மொழிகள் அனைத்தும் இலக்கியச் சிறப்புள்ளவைகளாக நன்கு கருதப்படும் வாய்ப்பு நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டு வருவதை யாரும் மறுப்பதற்கில்லை. இவற்றுள் பல ஏற்கனவே தற்படைப்புத் திறத்திலும் (originality), மொழியின் மேம்பட்ட நிலையிலும் (Superiority of language) சிறந்து விளங்குகின்றன. இலக்கிய வரம்புக்கு உட்பட்ட நிலையில் இவை உலக மொழிகளுடன் தனித் தனியாக வைத்து எண்ணப்படும் அளவில் உயந்ர்துள்ளதையும் கண்டு வருகிறோம்.. எனினும், விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகிய வரம்புகளுக்குள் இவை சிறப்பாக வளரும் வாய்ப்புக் குறைவாக இருப்பதை மொழி வெறியற்ற பலரும் கூட ஒப்புக்கொள்கிறார்கள்.

    அவ்வாய்ப்புகள் குறைந்திருப்பதற்கான காரணங்களைக் கீழ்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்.:-

    1.விஞ்ஞான, மருத்துவ, தொழில்நுட்ப நூல்கள் இந்நாளில் ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் படைக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் வேகத்திற்கு ஏற்பவும், அல்லது அவ்வேகத்தில் பாதியேனும் உலகத்து எந்த மொழியும் போட்டியிடக்கூடிய நிலையில் இல்லை.

    இதைக் குிறித்து காலம் சென்ற அணு விஞ்ஞானி ஹோமிபாபா அவர்கள் கூறுவதைக் கவனிப்போம்:

    The real problem is not static, but a dynamic one. Science is progressing very rapidly today and as something of the order of one worthwhile book is published on the average per day in English on some science in the world before we will be in a position to make original contributions and publish books at this rate. It must be remembered that this output in English is not the achievement of one nation, but the achievement of several, including those whose own national language is not English. For example, many eminent Scadinavian, Dutch, and Italian scientists publish their books in English today.

    2.பிராந்திய மொழிக்கு மாறவேண்டும் என்று கூறுகிறவர்கள் மொழிபெயர்ப்புகளை மட்டுமே நம்பியிருக்கவேண்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிகிறது. அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1