Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enna Valam Illai Nam Thirunattil?
Enna Valam Illai Nam Thirunattil?
Enna Valam Illai Nam Thirunattil?
Ebook185 pages58 minutes

Enna Valam Illai Nam Thirunattil?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிக்னிக் அல்லது டூர் என்பது எல்லோருக்குமே உல்லாசம் தரக்கூடிய பொழுதுபோக்கு. செய்யும் தொழிலிருந்து ஓய்வு என்பதற்கும் அப்பால் புதுப்புது இடங்களை ஸ்பரிசிக்கும் அந்த சுகமே தனி!

அதிலும் வெளிநாடு எனும்போது சொல்லவே வேண்டாம். அது ஒரு குதூகலமான குஷி. வாங்க பார்க்கலாம். நம் நாட்டில் இல்லாதது என்ன இருக்கு வெளிநாட்டில்?...

Languageதமிழ்
Release dateOct 9, 2021
ISBN6580132406626
Enna Valam Illai Nam Thirunattil?

Read more from Nc. Mohandoss

Related to Enna Valam Illai Nam Thirunattil?

Related ebooks

Related categories

Reviews for Enna Valam Illai Nam Thirunattil?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enna Valam Illai Nam Thirunattil? - NC. Mohandoss

    https://www.pustaka.co.in

    என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்?

    (அமெரிக்க பயணக்கட்டுரை)

    Enna Valam Illai Nam Thirunattil?

    (America Payana Katturai)

    Author:

    என்.சி. மோகன்தாஸ்

    NC. Mohandoss

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்னுரை

    பிக்னிக் அல்லது டூர் என்பது எல்லோருக்குமே உல்லாசம் தரக்கூடிய பொழுதுபோக்கு. செய்யும் தொழிலிருந்து ஓய்வு என்பதற்கும் அப்பால் புதுப்புது இடங்களை ஸ்பரிசிக்கும் அந்த சுகமே தனி!

    அதிலும் வெளிநாடு எனும்போது சொல்லவே வேண்டாம். அது ஒரு குதூகலமான குஷி.

    இந்த குஷியைப் பகிர, பொருளாதாரம், விசா, விடுமுறை என எல்லோருக்கும் அமைவதில்லை. அமையப் பெற்றவர்களும்கூட அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. எழுத்தாளர் என்பதால் இவற்றை பறைசாற்றி - மற்றவர்களை உசுப்பேற்றிவிட முடிகிறது.

    உண்மையைச் சொன்னால் அமெரிக்கா - எனது கனவல்ல. சுற்றிப் பார்க்க அல்லது எழுதலாம் எனக் கிளம்பவில்லை. அங்கே கணினித்துறையில் இருக்கிற உறவினர்களின் நீண்ட நாளைய அழைப்பிற்கு தலைவணங்கியதால் இந்தப் பயணம்.

    பொதுவாகவே, நம்மூரில் என்ன இல்லை. எதுக்கு வெளியே பறக்கணும் என்கிற எண்ணமும் திமிரும் எப்போதுமே எனக்குண்டு. அங்கு சென்று வந்த பின்பு அந்த திமிர் இன்னும்கூட அதிகமாகியிருப்பது வாஸ்தவம்.

    அங்கே எல்லாவற்றையும் பிரம்மாண்டமாக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை பத்தாகவும் இல்லாததை இருப்பதாகவும் காட்ட முடிகிறது. தெரிந்திருக்கிறது. நாமும், இருப்பதைக்கூட இல்லாததாக்கிக் கொண்டிருக்கிறோம். நம் பொருளாதாரம், ஜனத்தொகை, அரசியல், ஊழல் இவற்றால் நமக்கு விமோசனம் கிடைக்காமலேயே இருக்கிறது.

    இந்தக் கட்டுரையை தினமலர் வாரமலரில் தொடராக எழுதும்போது எனக்கு புது அனுபவம். எதிர்பார்க்காத நம்ப முடியாத அளவிற்கு வரவேற்பு. வாழ்த்துக்கள். வசவுகள்.

    இது அமெரிக்காவின் சரித்திரமோ பூகோளமோ அல்ல. என் நோக்கமும்கூட அதுவல்ல. குறுகிய அவகாசத்தில் பார்த்த - கேட்ட அனுபவித்து- அனுபவிக்க முடியாததின் தொகுப்புதான் இது.

    இதை தொடராக்க உற்சாகம் தந்த எனது குருநாதர் தினமலர் திரு. ரமேஷ் அவர்களுக்கும் அமெரிக்க சுற்றை சீர் செய்துகொடுத்த நண்பர்கள் விஜய் - அபர்ணா, சரவணன் - பிரவீனா; மற்றும் இதை சிறப்பாக பு(து)த்தகமாக்கியுள்ள குமுதம் குழும சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் பா. வரதராசன் அவர்களுக்கும் எனது நன்றி. நமஸ்காரம்.

    அன்புடன்

    என்.சி. மோகன்தாஸ்.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    எல்லோருக்குமே வெளிநாடுகளுக்குப் போகணும், சுற்றிப் பார்க்கணும் என்கிற ஆர்வமும் ஆசையும் இருக்கும். அதற்கான வாய்ப்பு, சமய- சந்தர்ப்பம் - விடுமுறை - பொருளாதாரம் அமையப் பெற்றவர்கள் பறக்கிறார்கள்.

    இல்லாதவர்கள் சினிமா -டி.வி., பத்திரிகைகளில் பார்த்து - படித்து மகிழ்ந்துகொள்கிறார்கள் - கொண்டிருக்கிறார்கள்.

    வேலைக்காக குவைத் போனபின்பு வசதி வாய்ப்புகள், பணப்புழக்கம் இருந்தாலும்கூட- லீவ் முழுக்க ஊர் - உறவுகள் - நட்பு - எழுத்து என்கிற ஆக்கிரமிப்பிலிருந்து மீள முடிவதில்லை. அத்துடன் சமூக சேவை என்கிற முள்கிரீடம்!

    நண்பர்களில் பலரும் மேலைநாடு, கீழை, வடக்கு, தெற்கு என்று சுற்றிவந்து கதைகதையாய் வலியவந்து சொல்லும்போது - அந்தத் தருணத்தில் மட்டும் ‘நாமும் சுற்றணும்’ என்கிற ஆவேசம் எழுந்து - அப்புறம் அடுத்து விடுமுறைக்குள் அது நமுத்துவிடும்.

    இந்தச் சுழற்சிக்கிடையில் எழுத்தோடு சம்பந்தப்பட்டு புத்தக வெளியீடு, படப்பிடிப்பு என்று தேவை ஏற்பட்டதால் பக்கத்தில் துபாய் மட்டும் பயணித்திருக்கிறேன். அப்புறம் மலேசியா!

    இந்தத் தருணத்தில் சகோதரரின் மகன் - மகள்கள் அமெரிக்காவில் வேலையும் - குடும்பம் - குழந்தையுமாய் இருந்து அழைத்துக் கொண்டேயிருக்க

    எதற்கும் விசா மனு போட்டு வைக்கலாமே என்று கிளம்ப சுற்றமும் நட்பும் விசாவெல்லாம் அவ்ளோ எளிதா என்ன... கிடைக்காது என்று மிரட்டி, ஆசீர்வதித்து

    பயபக்தியோடு குவைத்தில் இண்டர்வியூவிற்குப் போனதில் இரண்டு வருட விசா பிரசாதமாய் வழங்கினர். ஆனால், விடுமுறை நெருக்கடியில் அதற்குள் பறக்க முடியவில்லை.

    மறுபடியும் மனுபோட - ஏற்கெனவே விசா எடுத்துவிட்டு நீங்க போகலே இல்லே... அதனால திரும்ப தரமாட்டான் என்றும்

    இல்லை... இல்லை... அமெரிக்கா மேல நீங்க அவ்ளோ ஆர்வமாயில்லை. விசா கொடுத்தாலும்கூட அங்கு போய் செட்டிலாகிடமாட்டீங்கன்னு மகிழ்ந்து நிச்சயம் திரும்ப தருவான் என்றும் ஃபேஸ் புக், டிவிட்டர், இமெயிலில் பலருக்கும் பொழுதுபோயிற்று.

    முதல்முறை இருந்த பவ்யமும் திரில்லும் இல்லாமல் இம்முறை அசால்டாக விசா கொடுத்துவிட்டனர். அந்த விசா சூட்சுமம் - பம்மாத்துக்களை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

    பயணம் என்றால் நமக்கு மகிழ்ச்சி இருக்க வேண்டும். உல்லாசம்! சிலிர்ப்பு! அமெரிக்கா விஷயத்தில் அதெல்லாமில்லை. முழுக்க முழுக்க சங்கடம்! அவன் ஒழுங்காய் விடுவானா, குடைவானா, நம் பேச்சைக் கேட்பானா? என்ன கேட்பான் - என்ன பதில் சொல்லணும்?

    பாஷையும் பரிமாணமும் புரிந்தாலும் புரியாவிட்டாலும் யெஸ்... யெஸ்... நோ... நோ...! தாங்க்ஸ்! ஸாரி! என்று ஒப்பேற்ற வேண்டும் என்று நண்பர் சம்பத் சொல்லியிருந்தார்.

    ஏர்போர்ட்டில் உள்ள ‘அக்கா’ லக்கேஜ்ஜில் உள்ள சமாச்சாரங்கள் பற்றியெல்லாம் கேட்பார்கள். தைரியமாய் பேசுங்கள்! என்று அமெரிக்கா ஆனந்த் பாடம் எடுத்திருந்தார்.

    நான்கு விமானம் மாறணும்! பயணத்தைவிட டிரான்சிட் நேரம் அதிகம்! சாப்பாடு, தண்ணி தரமாட்டான் - காய்கறி - கனி - ஜூஸ் எதுவும் கொண்டுவராதீங்க! என்று கிலி ஏற்படுத்தினர்.

    வாஸ்தவத்தில் வெள்ளையர்களின் கெடுபிடிகளைவிட நம் ஆட்களின் - அது கூடாது- இது கூடாது - அப்படி இருக்கணும் - இப்படி இருக்கணும் என்கிற மிரட்டல்தான் அதிகம்! வேண்டிய அளவிற்கு இவர்கள் பயமுறுத்தி அனுப்பினபின்

    எல்லாம் கடக்கும்போது அங்கே - ‘ஃபூ... இவ்ளோதானா?’ என்று இளப்பம் தோன்றுகிறது.

    என்ன உருட்டல், மிரட்டல் - உச்சிமுதல் உள்ளங்கால் வரை செக்கிங் என்றாலும்கூட - அவர்களின் அணுகுமுறை - வனப்பு - நளினம் - நயமான பேச்சு - கொடுக்கும் மரியாதை இவற்றைப் பாராட்டியே ஆக வேண்டும்.

    இதெல்லாம் அரபி நாடுகளில் எதிர்பார்க்கவே முடியாது. பிற நாட்டினரை மனிதனாக மதித்தாலே பாக்கியம். எப்போதும் விரட்டு! அவர்களுக்குத்தான் முன்னுரிமை!

    அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளில் பொது ஜனத்தை (கிரிமினல்களை அல்ல) மிகவும் மதிக்கிறார்கள். பணிவான - கனிவான பேச்சு. திட்டுவதென்றாலும் கூட மிக்க அன்போடுதான். கத்துவதில்லை. புரியாதவர்களுக்கு ஒருமுறைக்குப் பல முறை சொல்கிறார்கள் - புன்னகையோடு.

    அந்தப் புன்னகையும் மரியாதையும் செயற்கையாய் இருக்கலாம்.

    ஆனால் அது அந்தந்த தருணத்திற்குப் பலமாய் - நமக்குப் பாலமாய் இருப்பது உண்மை.

    அடுத்து - என்னதான் படித்து, வெளுத்து - பணச் செழிப்பிலிருந்தாலும்கூட அவர்களிடம் பாராட்டப்பட வேண்டிய இன்னொரு விஷயம் -

    கியூ!

    ஏர்போர்ட், ரயில், பஸ், டாய்லட், மளிகைக்கடை என எங்கும் அழகாய் வரிசை பிடிக்கிறார்கள். முந்துவதில்லை. முட்டி மோதுவதில்லை.

    அசந்த நேரத்தில் தாவுவதில்லை. சண்டை பிடிப்பதில்லை. அப்பா - அம்மா- தாத்தா - பாட்டிகளை இழுத்து வைத்துத் திட்டுவதில்லை.

    இவையெல்லாம் நம்மூர் மும்பை, டெல்லி, பெங்களூருவில் கொஞ்சம் பரவாயில்லையென்றாலும்கூட - அரபு நாடுகளில் அதுவும் குறிப்பாய் குவைத்தில் எதிர்பார்க்கவே முடியாதது. உள்ளூர்க்காரர்கள் எங்கும் எப்போதும் நுழைவர், குறுக்கிடுவர், கொஞ்சம்கூட பொறுமை காப்பதில்லை.

    பதினெட்டு வருடங்கள் குவைத்தில் குப்பை கொட்டிவிட்டதால் அமெரிக்காவின் ஒவ்வொன்றையும் நம்மூரை மட்டுமின்றி அரபு நாடுகளுடனும் ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அது போகட்டும்.

    பயணத்திற்கான பர்ச்சேஸ், லக்கேஜ் - தலைவலிகளைத் தவிர்ப்பது பற்றியும் நிறைய பின்னால் சொல்ல வேண்டியிருக்கிறது.

    எங்களுக்கு அபுதாபிக்கு ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து ஆறு மணி நேர காத்திருப்பு. துணைக்கு மனைவி (துணைவி இல்லை) இருந்ததால் அவரது கேள்வி நேரத்திலேயே எல்லா நேரமும் போய்விட்டதால் பிரச்னையில்லை.

    அப்புறம் ஒன்பது மணி நேரம் பயணித்து பெல்ஜியத்தின் ப்ரோசல்ஸில் ஆறு

    Enjoying the preview?
    Page 1 of 1