Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vizhiye Kadhai Ezhuthu
Vizhiye Kadhai Ezhuthu
Vizhiye Kadhai Ezhuthu
Ebook282 pages1 hour

Vizhiye Kadhai Ezhuthu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"சாதிகள் இல்லையடி பாப்பா உயர் தாழ்ச்சி உயர்ச்சி கொளல் பாவம்"

சாதிவெறியால் தன் தந்தையால் கொல்லப்படும் காதலர்கள். ஒரு திருநங்கையின் அழகான காதல். மூளை வளர்ச்சி குறைந்த சிறுமியால் கொல்லப்படும் தந்தை. ஒரு ஏமாற்றுக்காரியின் பொய்க் காதலால் விபச்சாரத்திற்குள் தள்ளப்படும் காதலன். ஒரு நிஜமான காதலனின் நிறைவேறாக் காதல்... இவை ஒவ்வொன்றும் தொடர்புடைய அதேநேரம் ரகசிய முடிச்சுகளுடன் பயணித்து முடிவில் ஓரிடத்தில் இணைகிறது. கதை படித்து அறிந்துகொள்ளுங்கள்.. கொஞ்சம் கற்பனையும் உண்மையும் கலந்த கதை...

Languageதமிழ்
Release dateOct 9, 2021
ISBN6580148407516
Vizhiye Kadhai Ezhuthu

Read more from Yamuna

Related to Vizhiye Kadhai Ezhuthu

Related ebooks

Reviews for Vizhiye Kadhai Ezhuthu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vizhiye Kadhai Ezhuthu - Yamuna

    https://www.pustaka.co.in

    விழியே கதை எழுது

    Vizhiye Kadhai Ezhuthu

    Author:

    யமுனா

    Yamuna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/yamuna

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஏய்...ஏய்...ஏய்...அடப்பாவிப்பய பூச்ச...ஓடுற ஓட்டத்தப்பாரு....நேத்து வெச்ச கருவாட்டுக்குழம்பு கொஞ்சம் மிச்சம் கெடந்திச்சி சட்டியில...இன்னிக்கு அதவெச்சி சமாளிச்சிப்போடலாம்னு பாத்தா...

    இடிவுளுவானுக்க கள்ளப்பூச்ச...சட்டிக்குள்ள தலையப்போட்டு..அம்புட்டையும் வழிச்சி நக்கிட்டுப்போயிடுச்சே...

    இந்தப்பக்கம் வா இனி...உங்( ) லியே சூடு வெச்சிப்புடுறேன்...மீனாம்மா தன் ஆதங்கத்தை பூனையிடம் கொட்டித்தீர்த்தார்...

    தாமிரபரணி நீரோடி செழித்த திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வாழும் தறி நெசவாளர் குடும்பம்...மகன் செல்வா... அம்மா.. மீனா. அப்பா துறை... வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட ஒழுக்கமான குடும்பம்...

    வறுமையின் வெளிப்பாடு... அந்த பழைய ஓட்டு வீடு ஆறுக்கு நான்கு அளவில் இரண்டே அறைகள்...அளிக்கம்புகள் கரையானால் அரிக்கப்பட்டு ஓடுகள் அங்கங்கே தாராளப் பிரபுவாய் வெயில்காலத்தில் தூசி மண்ணும் மழைக்காலத்தில் குடிநீரும் வீட்டுக்குள் வந்து சேர இடம்விட்டு விலகி நின்றன...

    ஒரு ரூமில் இரண்டு தறி ஒன்று பாவு இல்லாமலும் ஒன்று தீரும் கண்டிஷனிலும் இருந்தது.... சொசைட்டிக்கு அதில் நெய்து தரும் வேட்டிதான்... கிடைக்கிற சின்ன கூலியில்தான் இருவேளை.. சில நேரம் ஒரு வேளை உணவு என குடும்பம் ஓடியது...

    செல்வா ஒரு தறியிலும் அப்பா ஒரு தறியிலும் நெய்வார்கள்.

    பிளஸ் டூ வரைக்கும் முடித்துவிட்டு அப்பாவுக்கு துணையாக வந்துவிட்டான்... பார்க்க ஓரளவு அழகாகத்தான் இருப்பான் ஞாயமான உடற்கட்டு... அடுக்கடுக்காக சீவப்பட்ட தலைமுடி.. ஒழுக்கமாக வளர்ந்த பையன் என்று அவன் தோற்றத்தில் நன்றாகவே தெரிந்தது

    விழியிலே உன் விழியிலே கனவுகள் கலைந்ததே...உயிரிலே நினைவுகள் தொடருதே...கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே...முத்தமிட்ட உதடுகள் உலருதே...

    செல்வாவின் பழைய மாடல் ஃபோன் ரிங் ஆனது.. டிஸ்ப்ளே போயிருந்தாலும் அட்டென்ட் பண்ண முடியும் அந்த கண்டிஷனில் தான் இருந்தது..

    செல்வா அதை சார்ஜரில் போட்டுவிட்டு பக்கத்து ரூமில் தறி நெய்து கொண்டிருந்ததால் ரிங் சவுன்ட் கேட்கவில்லைபோலும்...

    பட் பக்கத்திலேயே தார் சுத்திக்கொண்டிருந்த செல்வாவின் அம்மா அதை எடுத்து ஹலோ என்று சொல்லவும் ஓடி வந்து செல்வா பதற்றத்தோடு அந்த ஃபோனை அவங்க கையிலிருந்து பறித்துக்கொண்டான்..

    ஃப்ரென்ட் கால் பண்றான்மா...நீங்க போங்க... அவன் தன் கையிலிருந்து பறித்ததால் அம்மாவின் முகம் மாறியது...

    அதுக்கு ஏன்டா இப்டி பிடுங்கற...கண்ணன்தானே... அவங்கிட்ட நான் பேசினா என்னடா..ஏதோ நீ லவ் பண்ற பொண்ணுகிட்டயிருந்து கால் வந்தமாதிரி நடந்துக்ற... முறைத்துவிட்டுச் சென்றார்...

    எதிர்முனையில் கேட்ட குரல் ஏதோ சொல்ல.... அவர்கள் சொன்னதை பேப்பர் தேடி எழுதினால் அம்மா சந்தேகப்படுவாங்க...சோ... தன் கையில் எழுதிக்கொண்டான்...

    அம்மா சாப்பிட ஏதாச்சும் இருக்குதாம்மா...

    அம்மா அடுப்படியில் இருந்து வெளியே வந்து பதில் சொல்ல ஏதும் இல்லாததால்... பாவமாக அவன் முகத்தை பார்க்க அதைப் புரிஞ்ந்துகொண்ட செல்வா..

    வேணாம்மா...பரவால்ல சொல்லிவிட்டு... தன் ரூமிற்குள் சென்றான்...

    குளிக்கப்போனவன் வெளிய வரதுக்குள்ள அவனுக்கு ஏதாச்சும் சாப்ட குடுத்தாகணுமே.... அடுப்பங்கரைக்குள் போய் கையில செம்போடு வந்தவங்க..செல்வா இன்னும் வெளிய வராததால் வாசல்லியே காவல் நின்றார்.

    குளிச்சி ஃப்ரஷ் ஆயிட்டு எப்பவும் இந்த வேலைக்கு போடறதுக்காகவே பத்திரமாக வச்சிருக்ற அந்த நீலக்கலர் ஃபார்மல் சர்ட் பேன்ட் எடுத்து போட்டுக்கொண்டு பர்ஸ்ல இருந்த பாடி ஸ்ப்ரே எடுத்துத் தடவிக்கொண்டு வெளியில் வந்தான் செல்வா...

    அவன் தோரணை ஒரு முதலிரவுக்கு போகக்கூடிய புது மாப்பிள்ளை போல இருந்தது...

    எங்க செல்வா கிளம்பிட்டே...

    தறி நூல் பாவு வந்துச்சான்னு பார்த்துட்டு அப்படியே வேற ஒரு சின்ன வேலை இருக்குமா அதை முடிச்சுட்டு திரும்பி வர ரெண்டு நாள் ஆகும் எனக்காக காத்திட்டு கதவ தொறந்தே போட்டு இருக்காதீங்க..நான் வரேன்மா...செம்பை வாங்கிப்பார்த்தவன்...

    வேணாம்மா...நீங்க சாப்டுங்க...நான் போற இடத்துல சாப்ட்டுக்கறேன்...கிளம்பிவிட்டான்

    அம்மா மனதில் சின்னதாய் கலவரம்..

    கொஞ்ச நாளா அடிக்கடி இந்த மாதிரி ஏதாச்சும் சொல்லிட்டு நேரம் கடந்து அவன் வருவது சிறு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது..

    ஏதும் சரியாப்படலியே இந்த பய நடபடி...எப்ப வெளிய கெளம்புனாலும் இந்த ட்ரஸ்தானே போட்றான்...

    அடியேய்..மீனாப்பொண்ணு..நீ என்னமோ வகைவகையா கலர்கலரா தினுசுதினுசா ட்ரஸ் எடுத்துகுடுத்துருக்ற பாரு...பயபுள்ள அதையெல்லாம் மாட்டிக்காம இதைமட்டும் ஏன்டா மாட்டிட்டு போறான்னு கேக்றதுக்கு...

    இதுவே...அந்தபுள்ள சொந்தமா உழைச்சி கஷ்டப்பட்டு வாங்கி வெச்சிருக்கு...நீ வேற...போவியா வேலையப்பாத்துகிட்டு...

    செல்வா வெளியே போன கொஞ்ச நேரத்தில் அப்பா கையில் தறியில் ஓடும் ஓடத்தை சரி பண்ணிக்கொண்டே ஹாலுக்கு வந்தார்....

    மீனா எனக்கு சொசைட்டி வரைக்கும் போக வேண்டியிருக்கு பாவு வந்திச்சான்னு தெரியல ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடவா... சட்டையை மாட்டிகொண்டு கிளம்பினார்...

    ஏங்க... வெரும் வயித்தோட போறீங்களே நீத்தத் தண்ணி இருக்கு அதையாச்சும் குடிச்சிட்டு போகலாமில்ல.. நேத்து ராத்திரியும் எதுவுமே சாப்பிடல இந்தாங்க இதையாச்சும் குடிங்க என்று செல்வா குளிக்கப் போகும்போது அவனுக்காக எடுத்து வச்ச நீச்சத் தண்ணீர் சொம்பை அவரிடம் நீட்டினார்.

    அவர் அதை வாங்கி குடிக்கும்போது.

    ஏங்க செல்வாவும் பாவு வந்திருக்கான்னு பார்த்துட்டு வரேன்னு தானே போயிருக்கறான்..அப்புறம் நீங்க ஏன் போகணும்...

    என்னடி சொல்ற... மேனேஜர் அவன்கிட்ட ஏதும் முன்னமே வரச்சொல்லி சொல்லிட்டாரு போல... அப்படியே இருந்தாலும் பணம் இல்லாம இவன் எப்படி கொண்டுவரமுடியும்... கஞ்சி காய்ச்சவே காசு இல்ல பாவு எடுக்க பணத்துக்கு என்ன பண்ணுவான்...

    சரி போயிருக்கிறான்ல... வரட்டும் கேட்டுக்கறேன்... எனக்கும் தறியில எழ அறுந்து கிடக்கு பொணைக்கணும் சொல்லிக்கொண்டு உள்ளே சென்றார்..

    வீட்டிலிருந்து ரோட்டுக்கு வந்த செல்வா கையில் தான் எழுதியிருந்த அட்ரஸை பார்க்க....

    அச்சச்சோ அது அழிஞ்சி போயிருச்சு... ச்சை... இதுவேறயா...

    எழுதும்போது ஏதோ ஒன்றிரெண்டு மட்டும் நல்லா ஞாபகம் இருந்ததால் அந்த அட்ரஸ் படி பஸ் ஏறி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தான்...

    வீட்டிற்குத் தெரியாமல் அவன் செய்துகொண்டிருக்கும் அந்தத் தொழில் என்ன???

    ***

    இடம்..திருநெல்வேலி..

    மாதேஷ்... (மெயின் ஹீரோ இவன்தாங்க)

    நடுத்தரக்குடும்பத்தில் சாதி வெறிபிடித்த அப்பா வேல்பாண்டிக்கும் பாசமான அம்மா சிறுவாணிக்கும் பிறந்த இரண்டாவது பையன்... மூத்தவன் பாரதி... இவனும் அப்பாவின் குணமுடைய முரடன்... மாதேஷ் கல்லூரியில் பி. காம் மூன்றாமாண்டு படிப்பவன்...

    தினமும் காலேஜிக்கு அந்த ரயிலில்தான் செல்வான்.. அன்றும் அதுபோல மாதேஷ் தனக்கான சீட்டில் உக்காந்திருந்தான்.. அப்போ அந்த பாட்டு சத்தம் கேட்டது...

    எவனோ ஒருவன் வாசிக்கிறான்

    இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

    தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

    அதைத் தவணைமுறையில் நேசிக்கிறேன்

    கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்

    கேட்பதை அவனோ அறியவில்லை

    காட்டுமூங்கிலின் காதுக்குள்ளே அவன்

    ஊதும் ரகசியம் புரியவில்லை

    பூல்லாங்குழலே பூங்குழலே

    நீயும் நானும் ஒரு ஜாதி

    உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

    உனக்கும் எனக்கும் சரிபாதி

    கண்களை வருடும் தேனிசையில்

    என்காலமும் கவலை மறந்திருப்பேன்

    இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்

    என்றோ என்றோ இறந்திருப்பேன்

    ஒரு இளவயதுப் பெண் கையில் தட்டோடு தடவித்தடவி தட்டுத்தடுமாறி நடந்துகொண்டே ஸ்வீட் வாய்ஸில் பாடிக்கொண்டே வந்தாள்...

    பாட்டோடு அவள் தட்டில் சில்லரையும்... சில நோட்டுகளும் விழுந்தது.. அவள் பாட்டை அங்க இருக்ற எல்லாரும் ரசிச்சி கேட்டாங்க... பட் நம்ம ஹீரோ மாதேஷ் மட்டும் கண்டுக்கவே இல்ல...

    (அந்த பொண்ணு பெயர் மணிவிழி..இவதான் முக்கிய ஹீரோயின்...தெளிவில்லாத அரைகுறைப் பார்வை...ஆனால் நிழலாய் எல்லாம் தெரியும்... அப்பா இல்லாத பொண்ணு...அம்மாவுக்கு வாதம் வந்ததால படிப்பை பாதியில நிறுத்திட்டு பாட்டுப்பாடி வர்ற வருமானத்துல அம்மாவும் பெண்ணும் வாழ்றாங்க..தொடக்கத்தில் சின்ன வயசுல இவள் அம்மா பாட.... இவள் தட்டை ஏந்தி பிச்சை எடுப்பதுதான் வழக்கம்...அப்டி ஒருநாள் இவள் பிச்சை எடுக்கும் போது ஒரு பெரிய மனுஷனைக் காப்பாற்ற போயி அந்த ஆபத்தில் இவள் மாட்டியதால் பார்வை அரைகுறையாப்போயிடுச்சி)..

    ஐய்யய்யோ...கால் தடுக்கிடுச்சா மணிவிழி...என் கையப்புடிச்சி எந்திரிமா...

    ஒரு இடத்துல அவள் தடுமாறி விழப்போகும்போதும் மத்தவங்க அவளுக்கு ஹெல்ப் பண்றாங்க... பட் மாதேஷ் அந்த இடத்த விட்டே திரும்பக்கூட இல்ல..(கல்லுமனசுக்காரன் போல)

    அந்த பொண்ணு மாதேஷ் பக்கத்துல வரும்போது... அவன் தன்னோட பாக்கெட்ல இருந்து பர்ஸை வெளியே எடுத்தான்... அப்போ அதோட சேர்ந்து இருந்த ஒரு பாண்ட் பேப்பர் அவனுக்குத் தெரியாமலேயே சீட்டில் விழுந்தது...

    இதை கவனிக்காம.. மாதேஷ் அந்த பொண்ணு தட்ல பணத்த போட்டு... பர்ஸை மறுபடி பாக்கெட்ல வெச்சிட்டு சாதாரணமா ஜன்னலுக்கு வெளியே பாத்து உக்காந்திருந்தான்..

    பட் பார்வை மட்டுந்தான் வெளியே இருந்ததே ஒழிய அவன் மனம்....

    பாட்டு முடிஞ்சி.... மீதமிருந்தவங்ககிட்ட தன் தட்டுல வழக்கமா அவங்க போட்ற சில்லரையெல்லாம் கலெக்ட் பண்ணிவிட்ட மணிவிழி....

    ட்ரெயின் நின்னதும் கம்பியைப்பிடிச்சி பிடிச்சி மெதுவாக கீழே இறங்கி நடந்தாள்.. அவள் பின்னாடியே கொஞ்சம் தூரத்தில் மாதேஷ் இறங்கி நடந்தான்.. அப்போ...

    அந்த பொண்ணு என்னமா பாடுது... இவ்ளோ அழகான வாய்ஸ கொடுத்த ஆண்டவன் கண்ண பறிச்சிகிட்டானே. இந்த பொண்ணு மட்டும் சினிமாவுல பாடினா எங்கேயோ போய்விடுவா

    அட போப்பா நீ வேற..இப்ப எல்லாம் கழுதையும் காக்காவும் பாடுற பாட்டுங்களுக்குத்தான் ஃபேமஸ் அதிகம் அர்த்தமே இல்லாம பாடுறாய்ங்க அதுதான் சூப்பர் ஹிட் ஆகுது

    ஆமா ஆமா அதுதானே ஆட்டத்துக்கு தோதா

    இருக்கு.. இங்க திறமை உள்ளவங்க எல்லாம் எங்கேயோ ஒரு மூலையில் வெளியத்தெரியாம இருக்காங்க.. லக் இருக்ற ஒன்ணு ரெண்டு பேரு தான் நல்லா வருவாய்ங்க...

    ஆமாப்பா...

    இதைக் கேட்ட... பின்னால் நடந்து வந்துகொண்டிருந்த மாதேஷ் சிரிச்சுகிட்டே அவங்களை தாண்டி ஓடிப்போய் முன்னாடி போயிட்டு இருந்த மணிவிழிய தோளோடு அணைச்சி கூட்டிக்கொண்டு... அவள் தலையைத் தன் தோளோடு சாய்த்து அவள் விரல்களோடு தன் விரல்கோர்த்து நடந்தான்..

    ***

    ஜொள்ளு ஹரிஷ்

    இடம்.. தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷன்..

    காமெடி ஹீரோ ஹரிஷ்...

    இவன் 90'ஸ்ல பொறந்து தொலச்சி குடும்பத்துக்காக உழைச்சி.. ஏதோ ஓரளவு பணத்தை சேர்த்து ஒரு வீடும் ஒரு காரும் வாங்கிட்டான்..

    35 வயசு கடந்து போச்சி... ஆனா பொண்ணுதான் கிடைக்கல... வயசையும் இழந்து கல்யாணக்கனவுல பொண்ணு கிடைக்காம பாக்கற பொண்ணுங்களையெல்லாம் லவ்வரா நினைச்சி வழியிற ஜொள்ளு பார்ட்டி..

    ஸ்டேஷன் வாசல்ல ஒரு கார் வந்து சர்ர்ர்னு நின்னது... அதுல இருந்து ஒருத்தன் பில்டப் போட இறங்கிவந்தான்...

    ஸ்டைல்னு...ட்ரெண்ட்னு நெனச்சி...பொண்ணுங்கள இம்ப்ரஸ் பண்றதுக்காக... ஒரு கோமாளி டிரெஸ்ஸை போட்டுட்டு ப்ளாட்ஃபாம்ல நடந்து வரும்போது எதுத்தாப்ல வந்த பொண்ணுங்கள எல்லாம் பார்த்து பார்த்து ஜொள்ளு விட்டுட்டு வந்தான்.. 😋😋😋

    அப்போ ஒரு அழகான பொண்ணு இவனை பார்த்து ஹாய் சொல்லிச்சி...

    ஆஹா... ஆஹா.. ஆஹாஹா..😇😇😇

    அந்த பொண்ணு தனக்கு சொன்ன ஹாய் ல மயங்கி வழிஞ்சிகிட்டே அவ பக்கத்துல போய் கைகுலுக்க போனான்...

    சட்டுன்னு அந்த பொண்ணு பின்னாடி வந்த வேற ஒருத்தன போயி ஹக் பண்ணிக்கிறா.. 🤗🤗🤗

    ச்சைசே... அழகா இருக்றாளே கஷ்டப்பட்டு கரெக்ட் பண்ணி லைஃப் எஞ்சாய் பண்ணலாம்னு நெனச்சா நமக்குன்னு எங்க இருந்துதான் வர்றானுங்களோ கரடிபசங்க...😠😠😠😠😠

    டேய் ஹரிஷ் சட்டு புட்டுன்னு வேற ஏதாவது ஒன்ண மடக்கப் பாருடா... ஓரமா ஒரு நரைமுடி தெரியுது... ஐயய்யோ..இந்த வடையும் போச்சே...🙄🙄🙄🙄

    நானும் எனக்குத்தான்ல நெனச்சேன்...ஹும்... நமக்கெங்க அந்த குடுப்பின...இன்னும் எத்தன நாள்தான் வழுக்கைய மறைக்றது... என் காதல் ராணியே... நீ இருக்றியா இல்ல இனிதான் பொறக்கப்போறியா... ச்சேச்சே...

    அதெல்லாம் பொறந்துருப்பா... என்னைய கண்டுபிடிக்க டைம் ஆகும்ல... நாங்க யாரு... ஹரிஷ் ல...ஆனாலும் கொஞ்சம் சீக்றமே கண்ல காட்டிரு குருநாதா.. சொல்லிக்கொண்டே அடுத்த பொண்ண பாத்து பல்லிளிச்சிட்டே நடந்தான்.. 😁😁😁😁😁

    ஹரிஷ்...(பின்னாலிருந்து ஒரு குரல்.).

    ஐயா... என் ராணி என்னை தேடி வந்துட்டாஆஆ...செம ஃபாஸ்ட்... குருநாதா...யூ ஆர் கிரேட்....நன்றி குருநாதா...❤❤❤❤❤😍😍😍😍😍

    சத்தம் கேட்ட பக்கம் திரும்பிப்பாத்தா💔💔💔....

    அட இதுங்களா... இதுங்கள மொதல்ல பாலைவனத்துல கொண்டு தள்ளணும்...எனக்கு முடி நரச்சதே இந்த காண்டா மிருகங்களாலத்தான்... கவுத்துட்டியே குருநாதா...

    ஹிஹி.. உங்கள எங்கெல்லாந் தேடினேன்... காணுமேன்னு பதறிட்டு அலையறேன்... ஏம்மா என்ன அப்பப்ப விட்டு போறீங்க... நீங்க இல்லாம எவ்ளோ ஏங்கிக்கெடந்தேன்... உங்களுக்குத்தான் எம்மேல பாசமே இல்ல போங்க... அம்மாவ கட்டிப்புடிச்சி அழுறமாதிரி கண்ண துடைச்சி நடிச்சான் ஹரிஷ்...😜😜😜😜

    ஆமா...நம்பிட்டேன்டா...நம்பிட்டே...அப்டியே ஏங்கிட்டாலும்...உன்னப்த்தி தெரியாதவங்க வேணா உன் பாசாங்க கண்டு நிஜம்னு நம்புவாங்க...உன்ன பெத்தவகிட்டியே பாவ்லா காட்டாத...வளியிது இந்தா தொடச்சிக்கோ...😈😈😈😈😈

    ப்ராமிஸ்மா...ஐ மிஸ்ட் யூ மா...

    போடா...போடா...கோமாளிப்பயல... வண்டிய எடு போ...

    அவங்களைக் காரில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு செல்லும்போது...

    நாங்களும் எத்தனை பொண்ணுங்கள தான் பார்க்கிறது எல்லா பொண்ணுங்களும் இப்டி தலையாட்டுறவளுங்க... இவன் வயசக் கேட்டதும் அப்படி தலைய ஆடுறாளுங்க... இவனுக்கு எப்போ கல்யாணம் ஆகி நாங்க எப்போ இவன் அலப்பற அல்ஷாட்டியத்லயிருந்து தப்பிக்கிறது...

    நல்லா வருது வாயில...சொல்லக்கூடாது...அடப்பாவி அம்மா...உங்களுக்கெல்லாம் உழைச்சி உழைச்சிதானே நான் அரைக்கிழவனா நிக்கிறேன்...நல்லா சொகுசா வாழறதுக்கு என்னை வெச்சி காய்நகர்த்திட்டு...இப்போ பழியெல்லாம் நானா....

    இருக்கட்டும்...இருக்கட்டும்...எனக்குன்னு ஒருத்தி வருவால்ல...அதுக்கப்புறம் உங்களையெல்லாம் பழுக்க காய்ச்சிறேன்...

    அதுக்கு முன்ன நான் வாயத்தொறந்தேன்னா...சோத்துக்கு சங்கூதிடுவீங்களே...நான் சிங்கியடிச்சிகிட்டு ஹோட்டல் ஹோட்டலா அலையவேண்டியதுதான்...சோ... பொறுமை கருமை எல்லாம் வாயில வெச்சி அடைச்சிக்கிறேன்....வேற என்ன செய்றது...

    ஹலோ...யாருங்க....ப்ரோக்கருங்களா...தோ...வந்துட்டே இருக்றோம்...அங்கியே நின்னுக்கங்க...வேற எங்கியும் போய் இந்த பொண்ணும் எம்புள்ளைக்கு கெடைக்காம பண்ணிடாதீக...

    முன்ன பண்ணதுபோல இந்தவாட்டியும் வந்த சம்மந்தத்த ப்ரோக்கர் கமிஷன் பைநெறைய வாங்க ஆசப்பட்டு வேற எவனுக்காச்சும் மாத்தி விட்டீக...அம்புட்டுத்தாய்ங்...

    நீரு ஹரிஸுகிட்ட அடிவாங்கபோறது உறுதி....சொல்லிப்போட்டேன்....

    இந்த பொண்ணாவது இவனுக்கு மாட்டுவாளா.....

    ***

    ம்ஹ..ஹ.ம்ம..நா...சாப்...பூவா...

    ஃபரிதா இப்படித்தான் தன் உணர்ச்சிகளை கையசைவோடு வெளிப்படுத்துவாள்...பார்க்கும் அத்தனை கனிந்த கண்களும் உள்ளங்களும் வேதனையில் வெதும்பி நிற்கும் ஃபரிதாவின் நிலை கண்டு.

    அவளிடம் பேச நினைத்து பக்கத்தில் செல்லும் மற்றவர்களை பயத்தில் கையில் கிடைப்பதை எடுத்து அடித்தே துரத்துவாள்...ஆனால் பழகிவிட்டாலோ பூவை விட மென்மையாய் மாறிவிடுவாள்...

    பதின்மூன்று வயதிலும் மூன்று வயது

    Enjoying the preview?
    Page 1 of 1