Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Punnagai Poovey Mayangathey
Punnagai Poovey Mayangathey
Punnagai Poovey Mayangathey
Ebook288 pages1 hour

Punnagai Poovey Mayangathey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒருத்தி மீது தன் பன்னிரண்டு வயதில் தொடங்கிய பிஞ்சுக் காதல். அது இருபது ஆனதும் முற்றி முளைவிட்டபோது அவளிடம் வெளிப்படுத்தும் நேரம் அவளுக்கு இன்னொருவன் மீது இருந்த காதலால் மறுத்துவிட சிறுவயதிலிருந்து அவளும் அதுவரைத் தன்னைத்தான் விரும்பினாள் என்ற எண்ணம் சுக்கு நூறாக்கப்பட்டதால் தற்கொலை செய்தவனை அதே காதலியே உயிர்மீட்டுக் கொண்டு வருகிறாள். தன் காதலுக்கு கல்லறை கட்டிவிட்டு அவனை வாழ வைக்கலாம் என்ற தருணத்தில் விதி வேறொரு காதல் தோல்வியடைந்தவனிடம் இவளைக் கொண்டு சேர்க்கிறது. அவனுடனும் வாழமுடியாமல் தன்னவனையும் மறக்க முடியாமல் தன்னை உயிராய் உலகமாய் நினைத்தவனையும் சாவுக்கு மீட்கப் போராடும் ஒரு இளம்பெண்ணின் வலி நிறைந்த கண்ணீர் கதை இது. உண்மையுடன் சேர்ந்த கதை. வலியுடன். உங்கள் யமுனா.

Languageதமிழ்
Release dateOct 9, 2021
ISBN6580148407522
Punnagai Poovey Mayangathey

Read more from Yamuna

Related to Punnagai Poovey Mayangathey

Related ebooks

Reviews for Punnagai Poovey Mayangathey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Punnagai Poovey Mayangathey - Yamuna

    https://www.pustaka.co.in

    புன்னகைப்பூவே மயங்காதே

    Punnagai Poovey Mayangathey

    Author:

    யமுனா

    Yamuna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/yamuna

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 1

    தன்னவனின் வருகைக்காகக் காத்திருந்து காத்திருந்து கண்களும் பூத்து நெஞ்சமும் நலிந்தவளாய் மீண்டும் நடக்கலானாள் கலை.

    இரண்டடிதான் எடுத்து வைத்திருந்தாள். தன் கரத்தில் மென்மை ஒன்று படர யாரோ ஒருவரின் கரங்களின் அணைப்பில் தன் கரம் இருந்ததை உணர்ந்தவளாய் வெடுக்கென கரத்தை உலுக்கிக்கொண்டே பின்னால் திரும்பினாள்.

    ஆயிரம் வால்ட் மின்சாரம் கண்ணில் பாய்ந்தது. முகமெல்லாம் மலர்ந்தாள். ஆனால் இந்தக் கைப்பற்றலை அவனிடம் தற்போது எதிர்பார்க்காதவளாய்

    என்ன கைய எல்லாம் புடிக்கிறீங்க. முதல்ல கைய விடுங்க அத்தான். யாராச்சும் பாத்தா நீங்க என்கிட்ட அடிபிடிக்கு நிக்குறீங்க. நல்ல வாங்கிட்டு போகப்போறீங்கன்னு உங்கள கிண்டலடிக்க போறாங்க என்றாள். அப்போதுதான் அவனுக்குப்புரிந்தது தான் இதுவரை அவளிடம் நடந்துகொள்ளாத ஒன்றை இப்போது முதல் முறையாக தன்னையும் மறந்து அறங்கேற்றியது. உடனே தன்னிலை உணர்ந்தவனாய் அவளின் கைப்பற்றலை மெதுவாய்த்தளர்த்தினான்.

    எப்ப அத்தான் ஊர்ல இருந்து வந்தீங்க? வீட்டுக்குப்போகாம இங்க என்ன பண்றீங்க? அம்மா நேற்றுக்கூட அப்பாகிட்ட உங்களப்பத்தி பேசிட்டிருந்தாங்க. இந்த வருஷம் புள்ள இன்னும் வரலியே. என்னாச்சிதோன்னு. அதப்பத்தி உங்க அம்மாக்கிட்ட கால் பண்ணி கேக்கணும்னு நெனச்சிட்டிருந்தாங்க என்று அடுக்கிக்கொண்டே போனாள்.

    இப்படி தான் பதில் பேச வாய்ப்பளிக்காமல் பொரிந்து தட்டிக்கொண்டிருந்தவளை இமைக்கொட்டாமல் இஞ்ச் இஞ்ச்சாக பார்வையாலே அளந்து கொண்டிருந்தான் அந்த இருபது வயது இளங்காளை.

    இவனைப்பற்றி சிறு அறிமுகம். பெயர் ஜீவன். ஆறடி உயரம் அம்சமான நீள்வட்ட முகம். பரந்த நெற்றி. ஜிம் போய் வலுவேற்றி வைத்திருந்த கட்டுடல். அவன் ஊரில் உள்ள பருவமங்கைகளின் காதல் மன்னன் இந்த மாநிறத்தான். கலையின் சொந்த அத்தை மகன். தன் தந்தையின் தங்கையை சென்னைவாசிக்கு மணம் முடித்துக்கொடுத்ததால் இவனின் பிறப்பு படிப்பு எல்லாம் சென்னைதான்.

    ஆனால் தன் ஐந்து வயது முதல் அவனின் ஒவ்வொரு விடுமுறையும் இங்குதான் கழிந்திருக்கிறது. தொடக்கத்தில் தன் தந்தையின் துணையுடன் வந்துகொண்டிருந்தவன் அவனின் பத்தாம் வகுப்பு விடுமுறை தொடங்கி எப்படியாவது அடித்துப்பிடித்து தனியாய் வரப்பழகியிருந்தான். அதுக்கும் காரணம் இருந்தது.

    என்னத்தான்! பதிலே பேசாம என்ன முழுங்குற மாதிரிப்பாக்குறீங்க. சரிசரி வாங்க வீட்டுக்குப்போலாம் அம்மா தேடிட்டிருப்பாங்க என்று வாய்ப்பேச்சிக்கு கூறினாளே ஒழிய, தன்னவனைப்பார்த்து தன் காதலைக்கூற விடாமல் இப்படி நந்திமாதிரி வந்துட்டானேன்னு மனசுக்குள்ள மருவிக்கொண்டே திரும்பி நடந்தவளின் கால்கள் ஏதோ ஒன்றில் இடற தடுமாறிக் கீழே விழப்போனவளைத் தன் உரமேறியக்கரங்களில் இலாவகமாய் ஏந்திக்கோண்டவன்

    அவளின் களங்கமில்லா அழகில் தன் ஆண்மை உயிர்பெற்றதால் செய்த சிறு தவறு அவள் வாழ்க்கைப்பாதையையே தலைகீழாகப் புரட்டிப்போடப்போகிறது என்று இருவரும் அப்போது அறிந்திருக்கவில்லைதான்.

    அத்தியாயம் 2

    அழகுக்கே அவள்மேல் பொறாமைவரும்படியான தோற்றம் கொண்ட பதினேழு வயது பதுமை. முன்புறம் சற்றே அதிக எடுப்பான இருமுகடுகள் இரண்டு இஞ்ச் கீழிறங்க இடையோ அல்லது கொடியோ என கிறங்கடிக்கும் தொடியுடன் மான்களே மல்லுக்கு வாங்களே எனக்கூப்பிட்டு போட்டிக்கு எத்தனிக்கும் கால்கள். காணும்கண்கள் தன் கருவிழிகளில் கவ்விக்கொண்டுசெல்ல நினைக்கும் அளவு அழகுப் பெட்டகம் கலை. பெயருக்கேற்ற கலையரசி. அவளை வர்ணித்துக்கொண்டிருந்த இந்த மீத ஐந்து நிமிடத்தில் இதோ அவள் கோயில் சென்றடைந்துவிட்டாள் தலைவாசலில்.

    தன்னவனைக்காணமுடியாத தவிப்பிலும், அவனிடம் காதல் சொல்லத்தடையாக வந்த அத்தானை மனதில் கரித்துக்கொட்டிக்கொண்டும் திரும்பி நடக்கவிருந்தவளின் கால்கள் ஏதோ ஒன்றின் மீது இடறிச்சறிய இருந்தவளின் இடையை திடமான ஆனாலும் இதமான கரங்கள் வளைத்துக்கொள்ள,

    விழுந்தோமா? இல்லையா? என்ற கேள்வியுடன் இருக்கமாக மூடியிருந்த விழிகளை மெல்லத் திறந்தவள் தன் அத்தானின் அன்புப் பிடியில் அடைக்கலமாயிருந்ததால் நிம்மதிப்பெருமூச்சுடன் தன்னைத் தரையில் நிலைப்படுத்தி எழும்பத்தயாரான அதே நேரம், தன் கரத்தில் தாங்கியிருந்த மஞ்சள் தேவதையின் கயல்விழிகள் ஜீவனை உடைக்க, வண்ணப்பூச்சு இல்லாமலேயே கோவைப்பழம்போல் சிவந்து, ‘தன்னை எடுத்து உண்ணடா’ என்று கூறிக்கொண்டிருந்தன…

    "நச்சுத்தலைப்பாம்பிற்குள்

    நாகமணியடி உன் கருவிழிகள்

    தெளிந்த நீருக்குள் விழுந்த

    தீச்சுடரடி நெற்றிப்பொட்டு

    நீலக்கடலின்மீது நீந்தும்

    நீண்டக்கதிர் வீச்சடி உன் இமைகள்

    வியக்க வைக்குதடி உன்

    விரிந்த தோள்கள்

    ஆரஞ்சுச்சுளைகளடி உன்

    செவிதழாம் அதரங்கள்

    சந்திரமதியடி நீ

    மயங்கினேன் நான் உன்

    மந்திர முகம் கண்டடி."

    நிலைதடுமாறச்செய்த அவளின் இதழ்கள் இதயத்தைப் பிசைந்தெடுக்க அதற்குமேலும் தன் ஆண்மை கட்டுப்படாது என்ற முடிவுடன் நொடிப்பொழுதில் அவளை இழுத்து தன் மார்போடு அணைத்து,

    தன் ஒரு கரம் அவளின் பின்னந்தலையை அணைத்திருக்க, மறுகரம் அவள் இடையை வளைத்திருக்க, தன் இதழோடு அவள் இதழ் பதித்து முதலில் மென்மை வருட ஒன்றும் அடுத்து தன் ஆண்மை தெறிக்க முரடாய் ஒன்றுமாய் இதழ்யுத்தம் நடத்தி முடித்தான்.

    கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் கனவில்கூட நினையாத ஒன்று அரங்கேறியிருந்ததை சற்றும் எதிர்பார்க்காத கலை அத்தானின் இரும்புப்பிடியிலிருந்து தன்னை விடுவிக்கப்போராடி முடியாமல் போக கண்களில் நீர்த்திவலைகளுடன் அவன் விழிகளை நோக்க அப்போதுதான் தன்னிலை உணர்ந்தவனாய் வெடுக்கென்றுத் தள்ளி நின்றான் ஜீவன்.

    அவனின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டவள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் வீட்டில் வந்து சேர்ந்தாள். இன்னும் அவளால் சற்றுமுன் நடந்ததை நிஜம் என்று நம்ப முடியாமல் அதேநேரம் நம்பாமல் இருக்கவும் முடியாமல் சத்தமின்றி அழுதுகொண்டே கட்டிலில் போய் விழுந்தாள்.

    அத்தியாயம் 3

    கண்ணீரோ அல்லது தண்ணீரோ என்று நினைக்கும் அளவு தொப்பலாய் நனைந்திருந்தது தலையணை. உள்ளம் குமுற குப்புற படுத்து கொதித்துக்கொண்டிருந்தாள் கலை. கண்முன்னே கடந்தகால நிகழ்வுகள் கதகளி ஆடியது.

    ஆம்! பாட்டி வீட்டு முற்றத்தில் நொண்டியாட்டம், கண்ணாமூச்சியாட்டம், கபடியாட்டம் என கள்ளம்கபடமின்றி மணிக்கணக்கின்றி விளையாடியிருக்கின்றனர் கலையும் ஜீவனும். அப்போவெல்லாம் ஜீவன் என்றே அழைப்பாள். அவனும் மஞ்சக்கெழங்கு என்றே கலையை கூப்பிடுவான்.

    அப்படித்தான் ஒருநாள் மாமரத்தடியில் நொண்டியாட்டம் மும்முறமாய் ஆடிக்கொண்டிருக்கையில் ஜீவனின் தந்தை வந்துநின்று சிறுவர்களின் சின்னச்சின்ன கிறுக்குத்தனங்களின் அழகை ஆசையாய் ரசித்துக்கொண்டிருந்தார்.

    அப்போ வழக்கம் போல கலை அடேய் ஜீவன், என்னைத் தொடுடா பாக்கலாம் என்றாள். இதைக்கேட்டு அதிர்ந்தேவிட்ட கலையின் மாமா சுதாரித்துக்கொண்டு கலையை அருகில் அழைத்தார். என்ன மாமா என்று மான்குட்டிப்போல வந்து அருகில் நின்றவளிடம் ஜீவன் உனக்கு யாரு? என்று கேட்க அவள் ஜீவன்தான் என்றாள். உடனே மாமா இல்ல தங்கமே அவன் உனக்கு என்ன முறை ன்னு சொல்லு என்றார். இப்போது அவர்கள் அருகில் ஜீவனும் நின்றிருந்தான். கலை சொன்னாள் தெரியாது மாமா. உன் அம்மா சொல்லித்தரலியா இது மாமா. இல்ல மாமா என்ற கலையிடம் சரி இப்போ நான் உனக்கு சொல்லித்தரேன் ஆனா இனிமே அவனை ஜீவன்னு கூப்பிடக்கூடாது சரியா என்றார். சரி மாமா, வேற என்ன சொல்லி அவனை கூப்பிடணும் என்று கேட்டாள். முதல அவன் இவன்னு சொல்றத நிறுத்துடி செல்லம். அத்தான் வாங்க போங்கன்னுதான் கூப்பிடணும் சரியா என்றார்.

    விளையாட்டுப்புள்ள அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம்கூடத்தெரியாமல் அழகாய் தலையாட்டி வைத்தாள். ஆனால் அதற்கு பிறகு ஜீவனை அத்தான் என்றே அழைக்கத்தொடங்கியிருந்தாள் சிறுமி. அதுவே அவளுக்கு எமனாய் முளைக்கும் என்று அப்போது அவளுக்குத்தெரியவில்லை.

    பன்னிரண்டு வயதில் கலையும் பதினான்கு வயதில் ஜீவனும் இருக்கும்போது விளையாட்டினூடே விளையாட்டாய் தன் தந்தை தன்னுடனான கலையின் உறவுமுறையை கூறியது ஜீவனின் ஆள்மனதில் பசுமரத்தாணியாய்ப்பதிந்திருந்தது.

    அன்றிலிருத்து தொடங்கியது ஜீவனின் கலையுடனான காதல் பயணம்.

    ஒவ்வொருமுறையும் கலை ‘அத்தான்’ என்று தன்னை அழைக்கும்போதும் அவன் தனக்குள் ஒரு மாற்றத்தை உணர்ந்தான். ஆனால் அப்போது அவனுக்கு அதுதான் காதல் என்று தெரியவில்லை. ஏதோ புது புத்துணர்ச்சி அவன் மனதிலும் உடலிலும் பரவுவதை மட்டும் உணர்ந்தான். அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்ததால் கலையிடம் திரும்பத்திரும்ப சொல்லச்சொல்லிக்கேட்பான். அவளும் சளைக்காமல் அவன் கேட்கும்போதெல்லாம் விளையாட்டாய் கூறிச்செல்வாள்.

    அதன்பிறகு வந்த ஒவ்வொரு விடுமுறையும் தனக்குக் கலையுடனான நெருக்கத்தை மனதளவில் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

    ஒரு விடுமுறைக்கு ஜீவனின் தந்தைக்கு அவனைக்கொண்டுவிட தனக்கு விடுமுறைக்கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையிலும் அவரிடம் அடம்பிடித்து தான் தனியாகவே சென்றுவிடுவதாய்க்கூறி தனியொருவனாய்த் தன்னவளைக்காணும் ஏக்கத்தில் ரயிலேறி வந்துவிட்டான் ஜீவன். அந்த அளவு கலை அவனுள் ஊறியிருந்தாள்.

    அதுமுதல் இதோ இன்றுவரை தனியாகவே வந்துகொண்டிருக்கிறான் தன்னவளின் மீது தனக்கான காதலை அவள் கண்டிப்பாக உணர்ந்திருப்பாள் என்ற நம்பிக்கையில்.

    அதற்கும் காரணம் இருந்தது. ஜீவன் ஒவ்வொருமுறை அவளைப்பார்க்கும்போதும் அவளுடன் பொதுவாக உரையாடும்போதும் ஜாடைமாடையாக தன் காதலை வெளிப்படுத்தியிருக்கிறான்.

    அத்தைக்குப்பிறந்தவளே ஆளாகி நின்றவளே.

    பருவம் சுமந்துவரும் பாவாடைத்தாவணியே

    தட்டாம்பூச்சிப்புடிச்சவ தாவணிக்கு வந்ததெப்போ

    மூன்றாம் பிறை இவள் முழுநிலவானதெப்போ...

    தில்பரிஜானே தில்தீவானே தித்திக்கிறத்தேனே

    உள்ளபடி நானே உனைச்சேர்வேனே ஒட்டியிருப்பேனே...

    என்னவென்று சொல்வதம்மா

    வஞ்சியவள் பேரழகை

    சொல்ல மொழியில்லையம்மா

    கொஞ்சிவரும் தேரழகை

    அந்தி மஞ்சள் நிறத்தவளை

    என் நெஞ்சில் நிலைத்தவளை

    நான் என்னென்று சொல்வேனோ

    அத எப்படிச்சொல்வேனோ…

    அவள் வான் மேகம் காணாத பால்நிலா…

    இப்படி பல முறை பல பாடல்கள் பாடியதில் தன் மனதின் ஏக்கங்களை அவள் உணர்ந்திருப்பாள் என்றே எண்ணியிருந்தான். அந்த எண்ணம் இன்னும் சில நாட்களில் சுக்குநூறாகப்போவதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லைதான். விதியின் குணமே விளையாடுவதுதானே...

    அத்தை சத்தம் கேட்டு அடுப்படியிலிருந்து எட்டிப்பார்த்த கலையின் அம்மா மரியா வாசலில் ஜீவனைக்கண்டதும் முகமெல்லாம் பற்கள் பரவ சிரித்துக்கொண்டே அட! வா வா ஜீவன். எப்படி இருக்குற? எப்ப ஊர்ல இருந்து வந்த? உன்னத்தான் நானும் உன் மாமாவும் தேடிட்டே இருந்தோம் தெரியுமா? வா உக்காரு. சாப்பிடலாம். கலை எங்க இன்னும் காணோமே காலையில பூசைக்குப்போனவ இன்னும் வீட்டுக்கு வராம என்னப்பண்றா? என்று வழக்கம்போல பொரிந்து தட்டினாள். தன் அத்தையிடமிருந்துதான் கலைக்கும் இந்தப்பழக்கம் வந்திருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டான் ஜீவன்.

    ஆனால் மறுபக்கம், கலை என்ன நினைத்திருப்பாளோ என்ற எண்ண ஓட்டம் கலவரப்படுத்திக்கொண்டிருந்தது. இருந்தும் ஒருவிஷயம் அவனை திடப்படுத்தியது.

    என்ன இருந்தாலும் அவள் எனக்கு உரிமைப்பட்டவள். எப்போது அவள் தன்னை அத்தான் என்றாளோ அன்றே அவள் எனக்கானவள் என்று கடவுள் என்னுள் அவளை ஆழமாய் பதித்துவிட்டான் என்று பெருமூச்சுடன் அமர்ந்திருந்தான்.

    அத்தியாயம் 4

    ஜீவன் தம்பி இந்த கலைப்புள்ளய இன்னும் காணல தம்பி ஒரு எட்டு போய்பாத்துட்டு கையோட கூட்டியாரியா அதுக்குள்ளாற அத்தை உங்க எல்லாருக்கும் சாப்ட தோசை எடுத்து வெச்சிடுறேன் என்ற அத்தைக்கு கலை எனக்கு முன்னாடியே வீட்டுக்கு வந்துட்டா அத்தை என்றான் ஜீவன், குரலில் ஜீவனே இல்லாதவனாய். என்ன சொல்ற தம்பி அவ வந்துட்டாளா என் கண்ணுல படவேயில்ல கலை அடியேய் கலை எங்கடி இருக்க என்று தன் தாயின் வழக்கமான சத்தத்தில் தன்னிலைக்கு வந்தவள் இந்தா வரேன்மா என்று கூறிக்கொண்டே முகத்தின் அழுகைச் சுவடு தெரியாமல் மறைக்க பின்புறம் சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தாள்.

    கலையின் குரலில் அதுவரை இல்லாத ஒரு மாற்றத்தை அப்போது உணர்ந்தான் ஜீவன். உள்ளுக்குள் சற்று உதறல் எடுத்தாலும் திடப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தான். பின்புறமிருந்து வந்த கலையைக்கண்ட மரியா பின்னாடியிருந்து ஏன்டி வர? அர்ச்சனை க்குப்போனவ எப்படி வந்த? சரி வீட்டுக்குள்ள போய்ப்பாரு உன் அத்தான் வந்துருக்காக, தம்பியையும் கூட்டிட்டு அடுக்களைக்கு வா ரெண்டுபேரும் சாப்டுங்க என்றாள்.

    மரியாவின் மனதிலும் ஜீவன் தன் மகளுக்கு கணவனாக வந்தால் நன்றாயிருக்குமே என்ற எண்ணம் உள்ளூர இருக்கத்தான் செய்தது. முறைப்பட்டவன்தானே! ஆனாலும் அவர்கள் வயதைக்கருத்தில்கொண்டும் ஜீவனின் பெற்றோர் தங்களைவிட வசதிபடைத்தவர்கள் பட்டணத்தில் இருப்பவர்கள் தன் மகளை எங்கே மருமகளாக ஏற்கப்போகிறார்கள் என்ற தாழ்வுமனப்பான்மை மேலோங்கியதால் அந்த ஆசையை தனக்குள்ளேயே புதைத்துவிட்டாள்.

    வீட்டிற்குள் வந்த கலை ‘ஆமா அவங்க செய்த வேலைக்கு இப்ப சாப்புட்றது ஒன்னுதான் கொறச்சல்’ என்று மனதில் நினைத்தவளாய் ஜீவனை ஏறிட்டும் பார்க்காமல் அம்மா சாப்ட கூப்புட்ராங்க என்று அதட்டலாய்க்கூறிக்கொண்டு வெடுக்கென சென்றுவிட்டதைக்கண்ட ஜீவனுக்கு மனம் சொடுக்கென்று ஆனது. அப்போதே அவனுக்குப்புரிந்திருந்தது தன் செயல் கலையை காயப்படுத்தியிருக்கிறதென்று. ‘கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ’ என்ற கலவரப்பட்ட முகத்துடன் எழும்பி அடுக்களைக்கு சென்று சாப்பிட அமர்ந்தான். கலையும் எப்போதும் அவன் அருகில் அமர்பவள் அன்று சற்று தள்ளியே அமர்ந்து சாப்பிட்டாள்.

    ஊருக்குச்செல்வதற்குள் கலையை எப்படியாவது சமாதானப்படுத்தி தன் காதலை அவளுக்குப்புரியவைத்து தன் வழிக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் என்ற முடிவோடு அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்தான். கைகளுவ எப்படியும் பின்னாடிதானே வரவேண்டும் என்று தானும் அங்கேயே காவல் நின்றான். இரண்டு நிமிடத்தில் அங்கே வந்தவள் ஜீவன் நிற்பதைக்கண்டு திரும்பி வீட்டுக்குள் வரச்சென்றவளை வேகமாக அருகில் சென்று வழிமறித்து நின்றான்.

    கலை உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.

    என்ன பேசவேண்டியிருக்கு வழிவிடுங்க அம்மா கூப்டுவாங்க

    ஒருநிமிசம் இந்த அத்தானுக்காக ஒதுக்கமாட்டியா.

    சரி சொல்லுங்க (கிராமத்துப்பொண்ணுங்க எப்பவுமே சொந்தங்கள மதிக்கிறவங்களாச்சே என்னதான் கோபம் இருந்தாலும் களங்கமில்லாம கூடப்பழகுன உறவாச்சே உருகிட்டா)

    எம்மேல கோபமா

    நீங்க செய்தது சரியா?.

    நீ எனக்கானவ இல்லியா.

    அதிர்ந்தேவிட்டாள்! ‘ஒருவேளை எதேச்சையாக நடந்திருக்குமோ’ என்ற எண்ணம் சுக்கு நூறானது.

    என்னது உனக்கானவளா? ஒருமையில் முதல்முறையாக அவள் கூறியது வலித்தது ஜீவனுக்கு.

    என்ன கலை இப்டி சொல்லிட்ட! அப்போ உம்மனசுல நான் இல்லியா கண்களில் நீர்த்துளி முட்டிக்கொண்டது ஜீவனுக்கு.

    அப்போதுதான் அவளுக்கு ஆணி அடித்தாற்போல் புரிந்தது ஜீவன் இதுவரையும் தன்னிடம் நடந்துகொண்ட ஒவ்வோரு நடவடிக்கையிலும் ஏதோ தனக்கு உணர்த்த முயன்றிருக்கிறான் என்று.

    Enjoying the preview?
    Page 1 of 1